ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனை தோற்கடித்து, தொழிலாளர் கட்சியின் அந்தோணி அல்பேனிஷ் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளார் என அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை வென்ற நிலையில், பெரும்பான்மைக்கு 4 இடங்கள் மட்டும் தேவை என்பதால், அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், அந்தோணி அல்பேனிஷிற்கும் அவரது புதிய அரசிற்கும் வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.