வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோவை மாவட்டம் வால்பாறையில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.