ஆப்கானிஸ்தானில் உணவுப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதியை தாலிபான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தாலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 22 மில்லியன் மக்கள் கடும் பசியால் வாடி வருவதாக உலக உணவு திட்டம் கூறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கியது முதலே ஆப்கானிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோதுமை விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு ஒவ்வொரு ஆண்டும், 6 மில்லியன் டன் கோதுமை தேவைப்படும் சூழலில் அந்நாட்டிற்கு மருந்துகளுடன் கூடுதலாக 50 ஆயிரம் டன் கோதுமையை மனிதாபினான அடிப்படையில் அனுப்பி வைப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.