ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா, அதே கிராமத்தை சேர்ந்த வினித்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் இருந்து வந்த கண்ணாயிரம், வினித்தின் தாய் ராக்குவை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய அபிராமம் போலீசார், கொலை செய்த கண்ணாயிரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.