சென்னை அருகே நாவலூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் BA4 என்கிற புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவமனைக் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.