குரங்கு தொற்று நோய் பரவல் பீதி காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
விமான நிலையங்கள் ,துறைமுகங்கள் மற்றும் நிலம் வழியே எல்லைகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பியாவில் 100க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு தொற்று நோய் பரவியதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகிறது.
ஜெர்மனியில் மிக அதிகமாகப் பரவிய நிலையில் பிரிட்டன், போர்ச்சுகல் இத்தாலி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோய்த்தொற்று பரவியுள்ளது.