புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மயில், மலை பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள வனம் மற்றும் வனவிலங்கு இயக்குனரகத்திற்கு சென்ற அவர், கோடை காலத்தில் அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் வன விலங்குகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
மேலும் வனத்துறைக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வனத்துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மயில், ஆந்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளையும் தமிழிசை பார்வையிட்டார்.