​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18000 கி. மீ தொலைவுக்கு சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் விரிவுபடுத்தப்படும் -அமைச்சர் நிதின் கட்காரி

Published : May 12, 2022 6:13 PM

18000 கி. மீ தொலைவுக்கு சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் விரிவுபடுத்தப்படும் -அமைச்சர் நிதின் கட்காரி

May 12, 2022 6:13 PM

நடப்பு நிதி ஆண்டில் நாடு முழுவதும் 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சாலைகள் அமைக்கவும், 2025 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்காரி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.