​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசியில் பொருட்களை வாங்கிவிட்டு கஞ்சா போதையில் கடைக்காரரை இளைஞர்கள் மிரட்டும் வீடியோ - போலீசார் விசாரணை!

Published : May 12, 2022 4:07 PM



ஓசியில் பொருட்களை வாங்கிவிட்டு கஞ்சா போதையில் கடைக்காரரை இளைஞர்கள் மிரட்டும் வீடியோ - போலீசார் விசாரணை!

May 12, 2022 4:07 PM

சென்னை பாரிமுனையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் இருவர் ஓசியில் பொருட்களை கேட்டு கடைக்காரரை மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் பைசல் ரஹ்மான் என்பவரது கடைக்கு சென்ற இளைஞர்கள், பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் கடைக்காரருடன் தகராறு செய்துள்ளனர்.

பணம் கேட்ட கடைக்காரரை அவர்கள் மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனை கடைக்காரர் வீடியோ எடுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கடைக்காரரை சரமாரியாக தாக்கிய நிலையில் அவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.