​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிசாவில் தயாராகி வரும் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம்.. 20000 பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்கும் வகையில் ஏற்பாடு..!

Published : May 12, 2022 6:34 AM

ஒடிசாவில் தயாராகி வரும் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம்.. 20000 பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்கும் வகையில் ஏற்பாடு..!

May 12, 2022 6:34 AM

ஒடிசாவில் உள்ள ரூர்க்கேலாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக அனைத்து நவீன வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

பிர்ஸா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் என்று பெயரிடப்பட உள்ள இந்த விளையாட்டரங்கில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும். இது இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டரங்காக இருக்கும்.

இது தவிர புவனேசுவரில் உள்ள காலிங்கா ஹாக்கி அரங்கமும் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் விரிவாக்கம் செயயப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 முதல் 29 ஆம் தேதி வரை ரூர்க்கேலாவில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபபெற உள்ளன.