​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் அசானி புயல் வடகிழக்கு நோக்கி நகரும் - வானிலை ஆய்வுத்துறை!

Published : May 11, 2022 8:11 PM



ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் அசானி புயல் வடகிழக்கு நோக்கி நகரும் - வானிலை ஆய்வுத்துறை!

May 11, 2022 8:11 PM

மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் ஆந்திரக் கடற்கரைக்கு இணையாக வடகிழக்காக நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

பிற்பகல் மூன்றரை மணி நிலவரப்படி புயல் மசூலிப்பட்டினத்துக்குக் கிழக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் நிலவியது.

இது வடக்கு வடகிழக்காக நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் நரசாபூர் கடற்கரையை அடையும் என்றும், மேலும் நகர்ந்து ஏனாம், காக்கிநாடா, துனி கடற்கரைக்கு இணையாகச் செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

புயல் இன்றிரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளைக் காலை தாழ்வழுத்த மண்டலமாகவும் மாறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புயலின் எதிரொலியாகக் கடலோர ஆந்திரத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.