​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 ஆண்டுகளில் இந்தியாவில் செமி கன்டக்டர் உற்பத்தி தொடங்கப்படும் - அனில் அகர்வால் தகவல்

Published : May 11, 2022 5:38 PM

2 ஆண்டுகளில் இந்தியாவில் செமி கன்டக்டர் உற்பத்தி தொடங்கப்படும் - அனில் அகர்வால் தகவல்

May 11, 2022 5:38 PM

ந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்க இருப்பதாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு செமி கன்டக்டர் முக்கியமானதாக உள்ளது என்றார்.

செமிகன்டக்டர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமிகன்டக்டர்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக கூறினார்.

இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பதற்காக தைவானின் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் அனில் அகர்வால் தெரிவித்தார்.