​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் ஏற்றுமதி அளவை 100 பில்லியன் டாலராக உயர்த்த திட்டம் - முதலமைச்சர் பேச்சு

Published : May 11, 2022 1:00 PM



தமிழகத்தின் ஏற்றுமதி அளவை 100 பில்லியன் டாலராக உயர்த்த திட்டம் - முதலமைச்சர் பேச்சு

May 11, 2022 1:00 PM

ற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சிறந்த ஏற்றுமதியாளர் களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலராக இருப்பதாகவும், இது 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் ஏற்கனவே 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடுபெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.