​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யா - உக்ரைன் போர் இந்தியாவிற்கு ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்

Published : May 10, 2022 9:22 PM

ரஷ்யா - உக்ரைன் போர் இந்தியாவிற்கு ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்

May 10, 2022 9:22 PM

ரஷ்யா - உக்ரைன் போர் இந்தியாவிற்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், இது போன்ற வாய்ப்புகளை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்த மத்திய அரசு உதவ தயாராக உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஏற்றுமதியாளர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், தோல் பொருட்கள் மட்டுமில்லாமல் துணி மற்றும் சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த முறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.