கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலி.. சீனாவின் பீஜிங்கில் வணிக வளாகங்கள் உட்பட பல கடைகள் மூடல்.!
Published : May 09, 2022 7:31 PM
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலி.. சீனாவின் பீஜிங்கில் வணிக வளாகங்கள் உட்பட பல கடைகள் மூடல்.!
May 09, 2022 7:31 PM
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக சீனாவின் மத்திய பீஜிங்கில் வணிக வளாகங்கள் உட்பட பல கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
ஷாங்காயை போன்று நிலைமை மாறிவிடாமல் தடுக்கும் முயற்சியாக, பெய்ஜிங்கில் ஏற்கனவே, உடற்பயிற்சி கூடங்கள், பொழுது போக்கு இடங்கள் மூடப்பட்டிருப்பதுடன், உணவகங்களுக்குள் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், 15 சதவீத மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.