​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி.!

Published : May 09, 2022 4:20 PM

100 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி.!

May 09, 2022 4:20 PM

ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த ஜாக் ரசல் இன மோப்ப நாய்க்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

பேட்ரன் என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்க்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில், வீர தீர சாகசங்களுக்கான பதக்கத்தை அதிபர் செலன்ஸ்கி அணிவித்தார். பதக்கம் பெற்ற உற்சாகத்தில் வாலாட்டிய நாயால் அங்கு சிரிப்பலை எழுந்தது.