இலங்கை பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா மறுப்பு தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையிலும் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சி 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளது.
அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் பதவியை ஏற்க முன் வருமாறு கோத்தபய ராஜபக்சே விடுத்த அழைப்பை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நிராகரித்தார்.