பாகிஸ்தானில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது.
ஹன்சா பள்ளத்தாக்கில், 20 நாட்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்ததால், பனிமலைகள் உருகி ஷிஸ்பர் ஏரியில் நீர் அளவு 40 சதவீதம் அதிகரித்தது.
ஏரி நிரம்பி வழிந்து நீரோடையில் வேகமாக வெளியேறிய தண்ணீர் மோதி ஹசனாபாத் நகரில் உள்ள ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது. இதே போல் மேலும் 33 ஏரிகள் எந்நேரம் வேண்டுமானாலும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளன.