உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் முதல் மேற்கு வங்கத்தின் ஹால்டியா வரையான உள்நாட்டு நீர்வழிப்பாதைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில், தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்தது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அடிப்படையானது என உத்தரவிடக் கோரி ஜுன்ஜுனுவாலா என்பவர் தாக்கல் செய்த வழக்கைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது.
அப்போது, இது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டதால் அதன்பின் மீண்டும் விசாரிக்க முகாந்தரம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.