தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய புயல் மேலும் வலுப்பெற்றுத் தீவிரப் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் பதினொன்றரை மணியளவில் புயல் விசாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இது வடமேற்குத் திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மாலையில் தீவிரப் புயலாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது மே 10 மாலையில் வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியை அடையும் என்றும், அதன்பின் வடக்கு வடகிழக்குத் திசையில் திரும்பிக் கடற்கரைக்கு இணையாக நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை நெருங்கும்போது மணிக்கு 125 கிலோமீட்டர் வரையான வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.