​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

Published : May 08, 2022 3:39 PM

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

May 08, 2022 3:39 PM

கோயம்புத்தூர் மக்களுக்குத் தங்குதடையின்றி சிறுவாணி குடிநீர் கிடைப்பது தொடர்பாக கேரள முதலமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பதில் கிடைக்காததால், அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்ட பின்னர், கோவை மாநகராட்சி வளாகத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 263 புதிய பணிகளுக்கான தொடக்க விழாவில் அவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட உள்ளது என்றார்.