​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Published : May 08, 2022 3:29 PM

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

May 08, 2022 3:29 PM

மிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா பகுதிகள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பைவிட 2முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் அசானி புயல் மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக உருவெடுக்கும் என்பதால், வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகம் வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.