மாணவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவோராக இருக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
Published : May 08, 2022 12:55 PM
மாணவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவோராக இருக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
May 08, 2022 12:55 PM
இந்திய மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை உருவாக்குவோராக இருக்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 135 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் புதிய வளாகத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
அப்போது மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் மற்றும் மாநில அமைச்சர்கள் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாக்பூர் ஐஐஎம் வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு இங்குப் பயிலும் மாணவர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை உருவாக்குபவராக மாறும் மனநிலையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.