பட்டணப்பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதீனம் பேட்டி.!
Published : May 08, 2022 9:55 AM
பட்டணப்பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதீனம் பேட்டி.!
May 08, 2022 9:55 AM
பட்டணபிரவேசம் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அவரவர் பல்லக்கை சுமப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறினார். பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வரும் காலங்களில் மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச்செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு பதிலாக மாற்றாக வேறு ஏற்பாடுகளை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இதற்கு ஆதினங்கள் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.