​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்து : 32 பேர் பலி.. மீட்புப் பணி நீடிப்பு..!

Published : May 08, 2022 8:36 AM

எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்து : 32 பேர் பலி.. மீட்புப் பணி நீடிப்பு..!

May 08, 2022 8:36 AM

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில், எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கட்டிட இடிபாட்டுகளில் சிக்கி 19 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு பழமையான Saratoga நட்சத்திர விடுதியில், எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது.

அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் முன்பகுதி உருக்குலைந்து போனது.

இடுபாடுகளில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.