​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவில் நாளை வெற்றி தின கொண்டாட்டம்...வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை!

Published : May 08, 2022 7:25 AM

ரஷ்யாவில் நாளை வெற்றி தின கொண்டாட்டம்...வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை!

May 08, 2022 7:25 AM

ரஷ்யாவில் நாளை வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வீரர்கள் படை ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாஜி படைகளை போரில் சோவியத் ஒன்றியம் வென்றதன் 77-வது ஆண்டு விழா வெற்றி தினமாக ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மிடுக்கான தோற்றத்தில் படைகளுடன் வீரர்கள் தோன்றிய நிகழ்வு டைம் லேப்ஸ் முறையில் காட்சிப்படுத்தப்பட்டது.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு மத்தியில் வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.