திமுக மாநிலங்களவை குழு உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கும் அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
குடும்ப விவகாரம் காரணமாக 10 ஆண்டுக்கும் மேலாக தனது தந்தை திருச்சி சிவாவிடம் தான் பேசுவது இல்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.