ஆப்கானிஸ்தானில் பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் புர்கா அணிந்திருக்க வேண்டும் எனத் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்புக் கருதி அவர்கள் பொது இடத்துக்குச் செல்லும்போது உடல் முழுவதையும் மறைக்கும்படி புர்கா அணிந்திருக்க வேண்டும் எனத் தலிபான் அரசின் நல்லொழுக்க அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.