பள்ளி மாணவர்களுக்கு இணையவழி, நேரடி வகுப்பு கலந்த கற்றல் முறையை மேம்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்துப் பிரதமர் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் அணுகல், சமபங்கு, உள்ளடக்கம், தரம் ஆகிய நோக்கங்களுடன் தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகமாகத் தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க இணையவழி மற்றும் நேரடி வகுப்பு கலந்த கற்றல்முறையை மேம்படுத்தக் கேட்டுக்கொண்டார்.