கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கபிலா நதியில் தவறிவிழுந்த பெண், கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
மைசூர் அடுத்த நெஞ்ச தேவனாபுறா பகுதியை சேர்ந்த க்ரிஷ்- கவிதா தம்பதி, நஞ்சனகுடு கபிலா நதி கரையோரம் உள்ள சங்கமம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
அப்போது, கபிலா நதியை பார்த்த கவிதா, ஆர்வமிகுதியால் நதியின் அருகே உள்ள ஒரு சிறு பாறை மேல் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட கவிதாவை, காப்பாற்ற முயன்ற கணவரின் முயற்சி தோல்வியுற்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கவிதாவின் உடலை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டனர்.இதனிடையே, நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளுக்கு அருகே பாதுகாப்பின்றி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கபிலா நதி அருகே முறையான அறிவிப்பு பலகைகள் ஏதும் வைக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்,