​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்ய அதிபருடன் தொடர்புடைய சொகுசுக் கப்பலை பறிமுதல் செய்தது இத்தாலி அரசு

Published : May 07, 2022 5:31 PM

ரஷ்ய அதிபருடன் தொடர்புடைய சொகுசுக் கப்பலை பறிமுதல் செய்தது இத்தாலி அரசு

May 07, 2022 5:31 PM

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 5400 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசுக் கப்பலை இத்தாலி அரசு பறிமுதல் செய்துள்ளது.

6 தளங்களும், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்களும் கொண்ட இந்த சொகுசுக் கப்பல் ரஷ்ய அதிபர் புடினுக்குச் சொந்தமானது என்பதற்கான சான்றுகளை அலெக்சி நவல்னியால் நிறுவப்பட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் விருந்தினர்கள் 18 பேரும், மாலுமி பணியாளர்கள் 40 பேரும் தங்க முடியும். ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னப்டின் முன்னாள் தலைவர் எட்வர்டு குடைநட்டோவ் பெயரில் உள்ள இந்தக் கப்பல் இத்தாலியின் மரினா டி கராரி துறைமுகத்துக்குப் பழுதுபார்க்கக் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் புறப்படத் தயாரான நிலையில் ரஷ்ய அரசுக்குத் தொடர்புடையது எனக் கூறி இந்தக் கப்பலைப் பறிமுதல் செய்ய இத்தாலி நிதியமைச்சகம் உத்தரவிட்டது. அதையடுத்துக் காவல்துறையினர் கப்பலைப் பறிமுதல் செய்தனர்.