​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை உயர்த்த எலன் மஸ்க் திட்டம்

Published : May 07, 2022 5:18 PM

டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை உயர்த்த எலன் மஸ்க் திட்டம்

May 07, 2022 5:18 PM

டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 2028ஆம் ஆண்டுக்குள் 26.4 பில்லியன் டாலராக உயர்த்த உலக பெரும் கோடிஸ்வரரான எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, டுவிட்டர் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை 2025ஆம் ஆண்டுக்குள்  3.2பில்லியன் டாலராகவும், 2028ஆம் ஆண்டுக்குள் 9.4பில்லியன் டாலராகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 45சதவீதத்தை விளம்பரம் மூலம் பெறவும் எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், டுவிட்டரில் அறிமுகமாகவுள்ள பணம் அனுப்பும் வசதி மூலம் 2023ஆம் ஆண்டுக்குள் 15 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் எனவும், இது 2028ஆம் ஆண்டில் 1.3பில்லியன் டாலராக அதிகரிக்கும் எனவும் எலன் மஸ்க் கணித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட தகவலின் படி, எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.