எச்டிஎப்சி நிறுவனம் வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி 3 விழுக்காடு உயர்த்தியுள்ளது.
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி பூச்சியம் புள்ளி 4 விழுக்காடு உயர்த்தியது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் அரை விழுக்காடு உயர்த்தியது.
இந்நிலையில் வீட்டுவசதி மேம்பாட்டு நிதியளிப்பு நிறுவனமான எச்டிஎப்சி கடன்களுக்கான வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி 3 விழுக்காடு உயர்த்தியுள்ளது.
உயர்த்தப்பட்ட பின் 7 விழுக்காடு முதல் ஏழு புள்ளி நான்கு ஐந்து விழுக்காடு வரை உள்ள புதிய வட்டி விகிதம் மே 9 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.