​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இன்றும் நாளையும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Published : May 07, 2022 3:27 PM

தமிழகத்தில் இன்றும் நாளையும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

May 07, 2022 3:27 PM

தமிழகத்தில் மே ஒன்பதாம் நாளில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெற்று வடமேற்குத் திசையில் நகர்ந்து, மே 10 மாலை வடக்கு ஆந்திரம் - ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 9 அன்று டெல்டா, மேற்குப் பகுதியில் உள்ள 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மே 10, 11 ஆகிய நாட்களல் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.