கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் தாக்கிய வழக்கில் ஊராட்சி துணைத் தலைவர் சரண்யா குமார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கண்டமங்கலம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் என்பவரை, சரண்யா குமார் காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரில் சரண்யா குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சரண்யாகுமாரை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.