மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
Published : May 07, 2022 10:25 AM
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
May 07, 2022 10:25 AM
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலைக்குள் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னமாக வலுப்பெறும் எனவும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை வரும் 10ம் தேதி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.