முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கும் விமான நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதித்தும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்த பின்னரும் சில பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் மறுப்பதாகப் புகார்கள் எழுந்தன.
பயணிகளுக்கு இது முற்றிலும் அநீதி இழைப்பதாகும் என்று கண்டித்துள்ள டிஜிசிஏ, பயணி குறித்த நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்து விட்டால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.