மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமை இல்லை என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நூரி மசூதியில் பாங்கு ஓதுவதை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்ய அனுமதி கோரி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், பாங்கு ஓதுதல் இஸ்லாமின் ஒரு பகுதியாகும் என்றும், அதை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வது இஸ்லாமின் பகுதியாகாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இறைவணக்கத்தை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வது அடிப்படை உரிமை இல்லை என இதற்கு முன் பலமுறை நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளதையும் சுட்டிக் காட்டினர்.