மேற்கு வங்கத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்குச் சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார்.
கூச்பிகார் மாவட்டத்தில் வங்கதேச எல்லையில் உள்ள தீன்பிகாவில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்குச் சென்ற அமித் ஷா, அங்கு மரக்கன்றுகளை நட்டார். எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
ஜிகாபாரியில் உள்ள எல்லைச் சாவடியைப் பார்வையிட்டதுடன், வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.