மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு 'செல்லூர் ராஜூ' தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியதால் கட்சி வேறுபாடின்றி உறுப்பினர்கள் சிரித்தனர்.
கேள்வி நேரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், மதுரையில் பொழுதுபோக்கிற்கு இடமே இல்லை என்றும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என நகைச்சுவையாக கூறினார்.