உலக நலனுக்கான பெருநோக்குடன் இந்தியா முன்னேறி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜெயின் பன்னாட்டு வணிக அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, வளர்ச்சிக்கான இந்தியாவின் தீர்வுகளை, இலக்குகளை அடையும் வழிமுறையாக உலக நாடுகள் கருதுவதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய அமைதி, செழிப்பு, சவால்கள் தொடர்பான தீர்வுகள் எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதாகத் தெரிவித்தார். திறமை, வணிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றை முடிந்தவரை அரசு ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார்.
நாள்தோறும் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், பெரு நிறுவனங்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியா என்பதே நமது பாதையும் தீர்மானமும் ஆகும் என்றும் தெரிவித்தார்.