பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்கள் சார்ந்த சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் விசாரணையில், நில அளவை பணிக்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், பட்டா கோரி 6 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அதனை விரைந்து முடிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டது. இதனை அடுத்து, நில அளவை குறித்த அரசாணையை எதிர்த்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.