உக்ரைன் - ரஷ்யா இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் இவ்வளவு நாள் நீட்டிக்கும் என தான் நினைக்கவில்லை என்றும் இந்த போரை பெலாரஸ் ஏற்கவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து, இம்மாத தொடக்கத்தில் பெலாரஸ் படைகள் ரஷ்ய படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டது குறித்து பேசிய அவர், யாரையும் அச்சுறுத்துவதற்காக ராணுவ பயிற்சி மேற்கொள்ளவில்லை எனவும் மோதலை உருவாக்கி மேற்கத்திய நாடுகளில் போரை உருவாக்குவது பெலாரஸின் திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.