இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழ்நாடு உள்ளதாகவும், நம்பர் ஒன் நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளம் குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், முன்பு ஆட்சிக்கு வருவோர் முதல் ஆண்டு முழுவதும் புதிய திட்டங்களை அறிவிக்கவும், அதற்கு நிதி ஒதுக்கவும் செலவிடுவார்கள் என்றும் நான்காம் ஆண்டில் தேர்தல் பற்றியே யோசிப்பார்கள் என்றும் கூறினார்.
ஆனால், தற்போது இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பிரதமர் சிந்தித்து செயல்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
பல சாதனைகளை இந்தியா செய்து வருவதாகவும்,150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.