​​ சென்னை முழுவதும் 21வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை முழுவதும் 21வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு

Published : Jun 29, 2018 11:33 AMசென்னை முழுவதும் 21வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு

Jun 29, 2018 11:33 AM

சென்னை முழுவதும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் நேற்று 21வது நாளாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை விமானநிலையத்தில் உள்ளே செல்லும் வாகனங்களும் வெளியே வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. அதுபோல் கிண்டி, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

image

வாகனங்களில் வேகமாக வந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வண்டியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் காவல்துறையினர் வாகனத்தை இயக்க அனுமதித்தனர்.

சென்னையில் தினந்தோறும் செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஸ்டார்மிங் ஆபரேசனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.