வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அரசு பள்ளியில் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்க வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொண்ட மாணவன் கணேசனின் பெற்றோர், தங்களது மகனை ITI-யில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.