விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கத்தாளம்பட்டியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான ஆலையில், வெடிமருந்து உராய்வு காரணமாக நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் இடிபாடுகளில் சிக்கி விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் சிதம்பரத்தை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.