மேற்கு வங்கத்தில் படகு ஆம்புலன்ஸ் சேவையையும், மிதக்கும் எல்லைச் சாவடிகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்துள்ளார்.
இந்திய - வங்கதேச எல்லையில் சுந்தரவனக் காடுகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஆற்றில் மிதக்கும் 6 எல்லைச் சாவடிகளைத் தொடக்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதில் பயணம் செய்து எல்லைப் பகுதிகளைப் பார்வையிட்டார்.
மேற்கு வங்கத்தின் சாகேப் காளி முதல் பீகாரின் சம்சேர் நகர் வரையுள்ள ஆற்றங்கரைப் பகுதிகள் பயனடையும் வகையில் படகு ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்.
அரிதாஸ்பூரில் அருங்காட்சியகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவருந்தினார்.