சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜுலை மாதத்தில் தொடங்கவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு 92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக முதற்கட்டமாக 40 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் எனவும், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்க 2 ஆயிரத்து 700 அறைகள், அவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.