​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத மாணவி... தந்தை உதவியுடன் தேர்வு எழுதி சாதனை..

Published : May 05, 2022 2:53 PM

இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத மாணவி... தந்தை உதவியுடன் தேர்வு எழுதி சாதனை..

May 05, 2022 2:53 PM

சென்னையில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலையிலும், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தந்தையின் உதவியுடன் வந்து பொதுத்தேர்வு எழுதினார்.

சென்னை கோடம்பாக்கதைச் சேர்ந்த வாலிபால் வீராங்கனையான மாணவி சிந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டின் 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன.

உயிருக்குப் போராடும் நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்து, ஒன்றரை ஆண்டுகாலம் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இணைய வழியில்   12ஆம் வகுப்பு பள்ளி படிப்பையும் தொடர்ந்து தற்போது தேர்வும் எழுதியுள்ளார்.